‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தற்போது விவேகம், விஜய் -61 மற்றும் தெலுங்கில் நேனே ராஜூ நேனே மந்திரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். தமிழில் அஜித், விஜய் என இரண்டு முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஒரே நேரத்தில் நடிப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் காஜல் அகர்வால், அடுத்தபடியாக இன்னும் சில பிரபல நடிகர்களின் படங்களை கைப்பற்றும் முயற்சியிலும் தீவிரமடைந்துள்ளார்.
இந்தநிலையில், தெலுங்கில் நந்தமுரி கல்யாண்ராம் நடிக்கும் எம்எல்ஏ என்ற படத்தில் தற்போது கமிட்டாகியிருக்கிறார் காஜல் அகர்வால். இதற்கு முன்பு நந்தமுரி கல்யாண் ராமுடன் காஜல் ஜோடி சேர்ந்து நடித்த லட்சுமி கல்யாணம் படம் ஹிட்டடித்த செண்டிமென்டில் இந்த படத்திற்கு அவரை புக் பண்ணியிருக்கிறார்கள். மேலும், அரசியல் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் பாடல் காட்சிகள் மட்டுமே தோன்றி நடனமாடும் நாயகியாக இல்லாமல் அழுத்தமான பர்பாமென்ஸ் கொடுக்கக்கூடிய நாயகியாக இந்த படத்தில் நடிக்கிறார் காஜல்அகர்வால்.