Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோகன்லால் படம் மூலம் இயக்குனராகிறார் பீட்டர் ஹெய்ன்..!

07 மே, 2017 - 13:28 IST
எழுத்தின் அளவு:
Peter-Hein-to-direct-Mohanlal

தென்னிந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஸ்டண்ட் மாஸ்டராக திகழ்பவர் பீட்டர் ஹெய்ன்.. ஷங்கரின் படங்களில் அவரது ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிவரும் இவர், ரசிகர்களால் ஆரவாரமாக வரவேற்கப்பட்ட 'பாகுபலி' படத்திலும் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி படத்தின் வெற்றியில் பெரிதும் துணை நின்றார்.. கடந்த வருடம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'புலி முருகன்' படத்தில் பிரமிக்க வைக்கும் விதமாக சண்டைக்காட்சிகளை வடிவமைத்த பீட்டர் ஹெய்ன், அதற்காக தேசிய விருதும் பெற்றார்..


இப்போது ஆச்சர்யமான இன்னொரு விஷயமாக மோகன்லால் நடிக்கும் படத்தை தான் இயக்கப்போவதாக கூறியுள்ளார் பீட்டர் ஹெய்ன்.. 'புலி முருகன்' படத்தில் பீட்டர் ஹெய்னின் கடின உழைப்பையும் வேகத்தையும் பார்த்து வியந்த மோகன்லால், தான் தற்போது நடித்து வரும் 'வில்லன்' படத்தில் ஏற்கனவே ஸ்டண்ட் சில்வா பணியாற்றினாலும் கூட, பீட்டர் ஹெய்னுக்கும் சில சண்டைகாட்சிகளை கொடுக்க செய்தார்.. அதுமட்டுமல்ல அடுத்ததாக ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் பிளாக் மேஜிக்கை மையப்படுத்தி உருவாக இருக்கும் 'ஒடியன்' படத்திலும் பீட்டர் ஹெய்ன் தான் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்..


அதை தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் மகாபாரதம் படத்திற்கும் பீட்டர் ஹெய்ன் தான் மாஸ்டர்.. இப்படி கடந்த இரண்டு வருடங்களாக மோகன்லாலுடன் தொடர்ந்து பயணிக்கும் பீட்டர் ஹெய்ன் இந்த வயதிலும் மோகன்லால் ஆக்சன் காட்சிகளில் அசத்துவதை பார்த்து, அவருக்காகவே ஒரு ஆக்சன் கதையை தயார் செய்தாராம். அதை மோகன்லாலிடம் சொல்லி சம்மதமும் வாங்கிவிட்டாராம்.. அனேகமாக மகாபாரதம் படம் ஆரம்பிப்பதற்கு முன் மோகன்லாலை வைத்து பீட்டர் ஹெய்ன் இயக்கும் படம் துவங்கிவிடும் என தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in