மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
துல்கர் சல்மானுக்கு மலையாள திரையுலகம் தாண்டி ஓரளவு நல்ல அறிமுகம் இருக்கிறது. இதனால் அவரைத்தேடி பல நிறுவனத்தின் விளம்பரங்களும் வருகின்றன. துல்கரும் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்கிற பாணியில் விளம்பரப்படங்களுக்கும் நேரம் ஒதுக்கி நடித்து வருகிறார். அந்தவகையில் ஜியோனி என்கிற சீனாவின் மிகப்பெரிய மொபைல்போன் தயாரிப்பு நிறுவனத்தின் பிராந்திய தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் துல்கர் சல்மான்.
அந்தவகையில் ஏற்கனவே இந்த நிறுவனத்தின் தூதராக இருக்கும் அலியாபட் நடத்தும் 'செல்பிஸ்டன்' என்கிற பிரச்சாரத்தில் இணைந்துள்ளார். இந்த பிரச்சாரத்தில் துல்கர், அலியாபட்டுடன் ஸ்ருதிஹாசன் மற்றும் பாலிவுட் நடிகரான தில்ஜித் தோசந்த் ஆகியோரும் இணைந்துள்ளனர். இந்த நிறுவனத்தின் விளம்பரத்துக்காக எடுக்கப்படும் விளம்பரப்படத்தில் இவர்கள் ஒன்றாக இணைந்து நடிக்கவும் உள்ளனர்..