மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தெலுங்கு வருடப்பிறப்பான(மார்ச் 29) யுகாதி திருநாளை ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் அவர் நடித்து வரும் ஜெய்லவகுச படக்குழு படப்பிடிப்பு தளத்தில் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். ஜூனியர் என்.டி.ஆர்., மூன்று வேடங்களில் நடிக்கவிருக்கும் இப்படத்தில் ராக்ஷி கண்ணா நாயகியாக நடிக்கின்றார். மேலும் இரு நாயகிக்களுக்கான தேர்வு நடக்கின்றது.
இந்நிலையில் இயக்குனர் பாபி இயக்கத்தில் அண்ணபூர்ணா ஸ்டுடியோஸில் ஜெய்லவகுச படத்தின் படப்பிடிப்புகள் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன. இப்படப்பிடிப்பு தளத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் படக்குழுவினர் யுகாதி கொண்டாட்டங்களில் நேற்று ஈடுபட்டுள்ளனர். இதில் நாயகி ராக்ஷி கண்ணாவும் கலந்து கொண்டாராம். ஜூனியர் என்.டி.ஆரின் சகோதரர் கல்யாண் ராம் தயாரிக்கும் ஜெய்லவகுச படத்தை ஆகஸ்டில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.