தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
அமலா முன்பு பீக்கில் இருந்த காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்துக்கொண்டு இருந்தாரே தவிர அவரால் மலையாள திரையுலகம் பக்கம் கவனத்தை திருப்ப முடியவில்லை. அப்படியும் கூட அவராகவே கால்ஷீட் அட்ஜஸ்ட் செய்து நடிக்க முடிந்தது 'எண்டே 'சூர்யபுத்ரிக்கு' (தமிழில் 'கற்பூரமுல்லை), 'உள்ளடக்கம்' என இரண்டே படங்களில் தான்.. அவ்வளவுதான்.. அதன்பின் தற்போது 26 வருடம் கழித்து மலையாளத்தில் அமலா நடித்துள்ள 'c/o சாயிரா பானு படம் நாளை (மார்ச்-17) ரிலீஸ் ஆகிறது.
அறிமுக இயக்குனர் ஆண்டனி சோனி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக, டீனேஜ் பையனுக்கு அம்மாவாக கொச்சியை சேர்ந்த சாயிரா பானு என்கிற மிடில்கிளாஸ் முஸ்லீம் பெண்ணாக நடித்திருக்கிறார் நடித்துள்ளார்.. படத்தில் இவருக்கு போஸ்ட் வுமன் வேடமாம்.. ஆனி ஜான் தரவாடி என்கிற பப்ளிக் பிராசிக்யூட்டர் வேடத்தில் கதையின் இனொரு நாயகியாக அமலா நடித்துள்ளார்..