‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கமர்ஷியல் ஹிட் படங்களுக்கு பெயர்போன இயக்குனர் பூரி ஜெகன்நாத்தின் சமீபத்திய திரைப்படங்கள் ஹிட் வரிசையில் இடம்பெறவில்லை. இதனால் மகேஷ் பாபு பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகின்றது. இதற்கிடையில் தான் இயக்கி வரும் ரோக் படத்தில் கட்டாய வெற்றியை எதிர் நோக்கியிருக்கும் பூரி ஜெகன் நாத்திற்கு ஆரம்பமே சறுக்கியுள்ளது. ரோக் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஐதரபாத்தில் நடைபெற்றது. பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் விழாவில் பங்கேற்று நடனமாடுவதாக விளம்பரப்படுத்தப்பட்டது. இதுவே ரோக் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவிற்கு தனி விளம்பரமாக இருக்கும் என எண்ணிய பூரி ஜெகன்நாத்திற்கு அத்திட்டம் அதிர்ச்சி தோல்வியைக் கொடுத்துள்ளது. சன்னிலியோனின் நடனம் விழாவில் சொல்லும்படி இல்லை என டோலிவுட் ரசிகர்கள் குறைபட்டுக்கொள்கின்றனர். வழக்கமான வசீகரமும் குத்தாட்டமும் சன்னிலியோனிடம் மிஸ்ஸிங் என சோகத்துடன் அவரது ரசிகர்கள் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். ரோக் பட பாடல்களும் சுமார் ரகமே எனும் விமர்சனங்களும் பூரி ஜெகன்நாத்திற்கு கலக்கத்தை கொடுத்துள்ளன.