மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தனி அறிமுகம் தேவைப்படாமால் நட்சத்திர அந்தஸ்திலிருக்கும் தங்கள் பெற்றோரின் பெயரைப் பயன்படுத்தி அறிமுகம் தேடி கொள்கின்றனர் திரை உலக நட்சத்திரங்களின் வாரிசுகள். காலம் காலமாக தொடரும் இந்த கலாச்சாரம் டோலிவுட்டில் சற்று தூக்கலாகவே இருக்கும். மெகா குடும்பம், அக்கினேனி குடும்பம், நந்தமுரி குடும்பம், டகுபதி குடும்பம் என குடும்பம் குடும்பமாகவே டோலிவுட்டில் முன்னணி நடிகர்கள் உள்ளனர். இந்த வரிசையில் அடுத்து இணையவிருக்கின்றார் ஷிவானி.
தமிழகத்தைச் சேர்ந்த ராஜசேகர் 80,90களில் தமிழைக்காட்டிலும் தெலுங்கில் மிகப்பிரபலம். தமிழ்,தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த ஜீவிதாவை காதல் திருமணம் செய்துகொண்ட ராஜசேகருக்கு இரு மகள்கள். இதில் மூத்த மகள் ஷிவானி தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமாக தயாராகி வருகின்றார். ஜீவிதா, தனது மகள் ஷிவானியை 2017ல் திரைப்படங்களில் நடிக்க வைப்பார் என்று ஏற்கனவே செய்தி வெளியானது.
இதற்கேற்றார் போல் ஷிவானி நாயகியாக நடிக்கவிருக்கும் படத்தை இயக்குனர் தேஜா இயக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ராஜசேகர்-ஜீவிதாவின் குடும்ப நண்பரும் இயக்குனருமான தேஜா, மறைந்த நடிகர் உதய்கிரண், நிதின், நவ்தீப், நந்திதா பலரை அறிமுகம் செய்துள்ளார். இவர் இயக்கவிருக்கும் படத்தில் ஷிவானி நடிக்கவுள்ளாராம். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.