'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
பக்ளி, எம்.எஸ்.தோனி போன்ற ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை கியரா அத்வானியை தெலுங்கு படங்களில் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல தெலுங்கு படங்களில் நடிக்க மறுத்த கியரா அத்வானி அல்லு அர்ஜூன் திரைப்படம் என்றதும் கதையை கேட்க்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் டீஜே படத்தில் நடித்து வருகின்றார் அல்லு அர்ஜூன். பூஜா ஹெக்டே அல்லு அர்ஜூனுக்கு நாயகியாக நடிக்கும் அப்படத்தின் படப்பிடிப்புகளை நிறைவு செய்த பின்னர், இயக்குனர் வம்சி இயக்கும் நா பேரு சிவா நா இல்லு இந்தியா எனும் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிக்க கியராவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. வம்சி கூறிய கதை பிடித்திருந்ததாலும், டோலிவுட்டின் முன்னணி நடிகர் என்பதாலும் இப்படத்தில் நடிக்க கியரா வாய்மொழியாக சம்மதம் தெரிவித்துள்ளாராம். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.