‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
30 ஆண்டுகளாக நாயகனாக நடித்து வரும் வெங்கடேஷ் தற்போது பாடகராகவும் மாறிவிட்டார். இளம் ஹீரோக்கள் பலரும் தங்கள் படங்களில் பாடல் பாடுவதை வழக்கமாக கொண்டுள்ள சூழலில் வெங்கடேஷும் அந்த வரிசையில் இணைந்துள்ளார். தமிழ் மற்றும் ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கான குரு படத்தில் வெங்கடேஷ் நடித்து வருகின்றார். தமிழில் இப்படத்தை இயக்கிய இயக்குனர் சுதா தெலுங்கிலும் இப்படத்தை இயக்குகின்றார். இறுதிச்சுற்று படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் குரு படத்திற்கு இசையமைக்கின்றார். சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தில் இடம்பெறும் ஜிங்கடி எனும் பாடலை வெங்கடேஷ் பாடியுள்ளார். இப்பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள இப்பாடல் வரிகள் பிடித்திருந்ததால் வெங்கடேஷ் பாடலை பாட சம்மதித்ததாக தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரிக்கும் குரு படத்தில் ரித்திகா சிங் நாயகியாக நடிக்கின்றார். ஏப்ரலில் இப்படம் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.