ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஷ்ருதிஹாசன் நடித்து வரும் கட்டமராய்டு படத்தை இயக்குனர் டோலி இயக்கி வருகின்றார். பவர் ஸ்டார் படங்கள் என்றாலே டிரைலர் ரிலீஸ், ஆடியோ ரிலீஸ் என புரமோஷன் நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக இருக்கும். ஆனால் பவன் கல்யாண் தற்போது நடித்து வரும் கட்டமராய்டு படத்திற்கு ஆடியோ ரிலீஸை விழாவாக நடத்தப்போவதில்லை என படக்குழுவினர் கூறுகின்றனர்.
பவன் கல்யாண் மட்டுமல்லாது, அல்லு அர்ஜூனின் சரைய்னோடு, ராம் சரணின் துருவா, சிரஞ்சீவியின் கைதி நம்பர் 150 போன்ற தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. அதே போல் பவன் கல்யாணும் கட்டமராய்டு படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை தவிர்ப்பதாகக் கூறப்படுகின்றது. தமிழில் அஜித் நடிப்பில் ஹிட்டான வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான இப்படத்தை தெலுங்கு வருடப்பிறப்பில் திரைக்கு கொண்ட வர முடிவு செய்யப்பட்டுள்ளது.