மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மலையாள திரையுலகில் துல்கரின் நண்பராக அறியப்படும் நடிகர் தான் சன்னி வெய்ன்.. சொல்லப்போனால் துல்கர் சல்மான் அறிமுகமான 'செகண்ட் ஷோ' படத்தில் தான் இந்த சன்னி வெய்னும் அறிமுகமானார்.. இந்தப்படத்தின் மூலம் நட்பான இவர்கள் அடுத்ததாக 'நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ண பூமி' 'கம்மட்டிப்பாடம்', 'ஆன் மரியா களிப்பிலானு' ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். ஆனால் துல்கரின் எதிர் துருவமாக கருதப்படும் பஹத் பாசிலுடன் இணைந்து நான்கு வருடங்களுக்கு முன்பே 'அன்னையும் ரசூலும்' என்கிற படத்தில் அவரது நண்பனாக நடித்திருந்தார் சன்னி வெய்ன்..
அதன்பின் கடந்த நான்காண்டுகளாக பஹத்துடன் இணைந்து நடிக்காமல் இருந்த சன்னி வெய்னுக்கு இப்போது 'ஆனெங்கிலும் அல்லெங்கிலும்' (ஆமான்னாலும் இல்லைன்னாலும்) படத்தில் மிக முக்கியமான கேரக்டர் கொடுத்து அவரை நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் விவேக் தாமஸ் வர்கீஸ்.. அத்துடன் பஹத் பாசிலுடன் சன்னி வெய்ன் பெயரையும் போஸ்டரில் சேர்த்தே வெளியிட்டுள்ளார்.. இந்த விவேக் சன்னி வெய்ன், துல்கர் நடித்த 'கம்மட்டிப்பாடம்' படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்து, இப்போது இயக்குனராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.