மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் |
திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் கையாளாக ஒரு காலை விந்தியபடியே 'அக்கா அக்கா' என அழைத்தபடி நடித்து அனைவரையும் கவர்ந்து விநாயகனை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியமா..? இங்கு தமிழில் தான் அவருக்கு படம் இல்லையே தவிர, மலையாளத்தில் சீரான இடைவெளியில் படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார் விநாயகன்.
குறிப்பாக 'டான்' கதைகள் என்றால் விநாயகனுக்கு என ஒரு கேரக்டரை ஒதுக்கி கர்ச்சீப் போட்டு வைக்கும் அளவுக்கு சோட்டா மும்பை, சாகர் அலைஸ் ஜாக்கி, சோட்டா மும்பை, பெஸ்ட் ஆக்டர், மசாலா ரிபப்ளிக் என பல படங்களில் இவரை தாதாகவாக, தாத்தாவின் வலதுகையாக பார்க்க முடிந்தது.. கடந்த வருடம் துல்கர் சல்மான் நடித்த 'கம்மட்டிப்பாடம்' படத்தில் அண்டர்கிரவுண்ட் டானாக நடிக்கும் துல்கர் சல்மானுக்கு வலதுகையாக, ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருந்தார் விநாயகன்.
சொல்லப்போனால் அந்தப்படத்தில் நாயகன் துல்கர் சல்மானை விட 'கங்கா' கதாபாத்திரத்தில் நடித்த விநாயகன் தான் அதிகம் பாராட்டுக்களை பெற்றார்.. ஆனாலும் கூட அவரது சிறந்த நடிப்பிற்கான ஒரு அங்கீகாரம் அவருக்கு கிடைக்கமாலேயே இருந்தது விநாயகனுக்கு மிகப்பெரிய மனக்குறையாக இருந்தது. குறிப்பாக தேசியவிருது, கேரளா அரசு விருது, ஏசியாநெட் விருது உட்பட பல விருதுகளிலும் விநாயகன் பெயர் இடம்பெறும் என எதிர்பார்த்து ஏமாந்தார்கள் ரசிகர்கள்.
ரசிகர்கள் மட்டுமல்லாது விநாயகனின் மனக்குறையையும் தீர்க்கும் விதமாக சமீபத்தில் சிறந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியதற்காக விநாயகனுக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது வனிதா அவார்ட்ஸ். தனக்கு விருது கிடைத்ததால் நெகிழ்ந்துபோன விநாயகன் விருதை வழங்கிய வனிதா இதழுக்கும் 'கம்மட்டிப்பாடம்' இயக்குனர் ராஜீவ் ரவிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.