‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லோபர் படத்தில் நடித்திருந்த வருண் தேஜ், தற்போது மிஸ்டர் படத்தில் நடித்து வருகின்றார். 80% படப்பிடிப்புகளை நிறைவு செய்துள்ள மிஸ்டர் படக்குழு இறுதிக்காட்சி மற்றும் பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் ஸ்ரீநிவாஸ் மற்றும் தாகூர் மது இணைந்து தயாரிக்கும் மிஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை மார்ச் 12ல் நடத்த திட்டமிட்டுள்ளனர். லாவண்யா திரிபாதி, ஹீப்பா பட்டேல் என இரு நாயகிகள் நடித்துள்ள மிஸ்டர் படத்தை ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார்.