‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா, ஹன்சிகா நடிப்பில் 2014ல் திரைக்கு வந்த திரைப்படம் மீகாமன். ஆக்ஷன் திரில்லராக வெளிவந்த இப்படம் பெயர் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் மீகாமன் படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மன்டே சூர்யோடு எனும் பெயரில் மீகாமன் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் மன்டே சூர்யோடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஆர்யா கலந்து கொள்வார் என கூறப்பட்டது. ஆனால் நிகழ்ச்சியில் ஆர்யா கலந்து கொள்ளவில்லை. கடம்பன், சந்தனதேவன் போன்ற தமிழ் படங்களில் பிசியாக இருக்கும் ஆர்யா, இஞ்சி இடுப்பழகி படத்தின் தெலுங்கு பதிப்பான சைஸ் ஜீரோ படத்தில் அனுஷ்காவுடன் நடித்திருந்தார். சைஸ் ஜீரோ படத்திற்கு பின்னர் மீண்டும் ஆர்யாவின் மீகாமன் திரைப்படம் தெலுங்கு பேசவுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மன்டே சூர்யோடு படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கூறப்பட்டது.