விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
விஜய் நடித்துள்ள 'பைரவா' படம் இன்று தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளாவிலும் வெளியாகியுள்ளது. கேரளாவில் அங்குள்ள முன்னணி நடிகர்களுக்கு இணையாக விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, மலையாள படங்களில் பெரும்பாலானவற்றில் ரஜினி அல்லது அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் விஜய் ஆகியோரின் பெயர்களையோ காட்சிகளையோ தவறாமல் பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல நம் தமிழ் ரசிகர்களுக்கு இணையாக கட் அவுட் வைப்பது, சுவர் விளம்பரம், பஸ் விளம்பரம் என கலக்குகிறார்கள்.
வழக்கமாக கேரளாவில் 200 தியேட்டர்களில் வெளியாகும் விஜய் படம் இப்போது அங்கே நிலவி வரும் தியேட்டர்கள் ஸ்ட்ரைக் காரணமாக இன்று எழுபது தியேட்டர்கள் என்கிற குறைந்த அளவிலேயே ரிலீஸாகி இருக்கிறது. ஆனாலும் விஜய் ரசிகர்களும் சரி, படத்தை கேரளாவில் வெளியிடும் விநியோகஸ்தர்களும் சரி, 'பைரவா' படத்திற்கு பிரமாண்டமாக விளம்பரம் செய்துள்ளனர்.. நம் ஊரில் கூட இல்லாத அளவுக்கு கேரள அரசு பேருந்துகளில் முன்புறம் தவிர்த்து மீதி மூன்று பக்கங்களிலும் 'பைரவா' விளம்பரம் கலக்குகிறது.., விஜய்க்கு மலையாளிகள் கொடுத்துள்ள அங்கீகாரத்தை பார்த்து கேரளாவில் உள்ள நம்ம ஊர் மக்கள் காலரை தூக்கிவிட்டுக்கொள்கிறார்கள்.