‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தென்னிந்திய மொழிகளில் இருப்பதிலேயே குறைவான வியாபர எல்லையை கொண்ட திரைப்பட உலகம் கன்னடம்.. அதற்கடுத்த இடத்தில் இருக்கிறது மலையாளம்.. பாலிவுட், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளும் நட்சத்திரங்களின் சம்பள விஷயத்திலும் படங்களின் வியாபர விஷயத்திலும் எங்கேயோ போய்விட்டன.. அப்படி இருக்கையில் தற்போதைய நிலவரப்படி மலையாள நட்சத்திரங்கள் தோராயமாக எவ்வளவு ஊதியம் வாங்குகிறார்கள் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இதுநாள்வரை, அதாவது 2015 வரை மோகன்லாலின் சம்பளம் 3 கோடியாகத்தான் இருந்து வந்தது. ஆனால் கடந்த வருடம் ஒப்பம், புலி முருகன், ஜனதா கேரேஜ் என தொடர் வெற்றிகளாலும், அவரது படங்களின் வியாபாரம் நூறு கோடி என்கிற எல்லையை தாண்டியிருப்பதாலும் மோகன்லாலின் சம்பளம் 5 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிகிறது. இதுவே மற்ற மொழிகளில் நடிப்பதென்றால் 6 கோடி ரூபாய் தரப்படுகிறது என்கிறார்கள்.
மம்முட்டியும் திலீப்பும் 2லிருந்து 2.5 கோடிக்குள் தான் வாங்குகிறார்கள்.. காரணம் இவர்களது படங்களின் வியாபாரம் இன்னும் 50 கோடிகளை தொடவே இல்லை. அதுமட்டுமல்லாமல் மம்முட்டியும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து நாளானதால் அவரது சம்பளம் ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. சுரேஷ்கோபி கிட்டத்தட்ட நடிப்பை விட்டு ஒதுங்கிவிட்டார் என்பதால் அவரது சம்பளம் 70 லட்சத்துக்குள் அடங்கி விடுகிறதாம்.
இளைய தலைமுறையில் பிருத்விராஜ் 1.5-2 கோடி வரைக்கும் வாங்குகிறாராம்.. பட்ஜெட்டையும் கால்ஷீட்டையும் பொறுத்து இது மாறுபடுகிறதாம்.. பிரேமம் படத்திற்கு முன் 50 லட்சம் வாங்கிக்கொண்டு இருந்த நிவின்பாலி இப்போது படத்திற்கு ஒரு கோடி கேட்கிறாராம். ஆனால் தமிழில் நடிப்பதற்கு இது பொருந்தாது என்றும் சொல்லப்படுகிறது..
துல்கர் சல்மான் - 75 லட்சம
பிஜுமேனன் - 75 லட்சம
பஹத் பாசில் - 65-75 லட்சம்
ஜெயசூர்யா - 60 லட்சம
குஞ்சாக்கோ- 60 லட்சம்
ஜெயராம் - 50 லட்சம் வரை வாங்குகிறார்களாம்.
இதுவே நடிகைகளை எடுத்துக்கொண்டால
மஞ்சு வாரியர் - 60-70 லட்சம்
நமீதா பிரமோத் - 10 லட்சம்
ஹனிரோஸ் - 8 லட்சம்
காவ்யா மாதவன் - 8 லட்சம்
பாவனா - 7 லட்சம்
என்கிற அளவில் தான் சம்பளம் இருக்கிறதாம்.