மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது 150வது படத்தில் தற்போது நடித்து வருகின்றார். இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில், சிரஞ்சீவியின் மகன் ராம் சரணின் தயாரிப்பில் உருவாகும் “கைதி நம்பர் 150” படத்தில் காஜல் அகர்வால் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கின்றார். 60வயதைக் கடந்த சிரஞ்சீவி நடிக்கும் 150வது திரைப்படம் என்பதால் கைதி நம்பர் 150 படத்தை தெலுங்கு திரை உலக வரலாற்றில் இடம் பிடிக்க செய்யும் வண்ணம் நிணைவு புத்தகம் ஒன்றை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. கைதி நம்பர் 150 படத்தின் உருவாக்கம் மற்றும் சிரஞ்சீவியுடன் பணியாற்றிய கலைஞர்களின் அனுபவம் இவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிட படக்குழு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் கைதி நம்பர் 150 படத்தின் சிங்கிள் டிராக் வெளிவந்து பட்டையை கிளப்பி வரும் நிலையில் இப்படத்தின் டிரைலர் 2017 ஜனவரி 1ல் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியிட இயக்குனர் முடிவு செய்துள்ளார். தமிழில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி நம்பர் 150 திரைப்படம் பொங்கலை முன்னிட்டு 2017 ஜனவரி 12ல் திரைக்கு வரவுள்ளது.