சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கடந்த வருடம் போலவே இந்த வருடமும் மம்முட்டி ரசிகர்களுக்கு ஏமாற்றம் தருவதாகவே கிறிஸ்துமஸ் பண்டிகை அமையப்போகிறது.. அதை நினைத்துத்தான் வருத்தத்தில் இருக்கிறார்கள் மம்முட்டி ரசிகர்கள்.. பின்னே.. மம்முட்டி நடித்துவரும் 'தி கிரேட் பாதர்' படம் கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகிறது என்று நேற்றுவரை சொல்லிவிட்டு, இல்லையில்லை படம் ஜனவரி-27ஆம் தேதிதான் ரிலீஸ் ஆகும் என இன்று திடீரென ஒரு அறிவிப்பு வெளியானால் எப்படியாம்.. கடந்த வருடமும் இதேபோலத்தான் மம்முட்டி-நயன்தாரா நடித்த 'புதிய நியமம்' படமும் கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகும் என சொல்லிவிட்டு பின்னர் பிப்ரவரியில் ரிலீஸ் செய்தார்கள்.
இப்போது கூட சாதாரண விதமாக இந்தப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனால் கூட மம்முட்டி ரசிகர்கள் அவ்வளவாக கவலைப்பட மாட்டார்கள்.. ஆனால் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில், அதிலும் மோகன்லால் நடித்த 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' படம் வெளியாவது உறுதியாகிவிட்ட நிலையில், தங்களது மம்முக்கா படம் தள்ளிப்போவதைத்தான் அவர்களால் ஏற்கமுடியவில்லை. இதனால் அவர்கள் பிருத்விராஜ் மீது தங்களது கோப பார்வையை திருப்பியுள்ளார்கள். பின்னே அவர் தானே இந்தப்படத்தின் தயாரிப்பாளர்.. ஆனால் பிருத்விராஜை கேட்டாலோ, படத்தின் தொழில்நுட்ப பணிகள் இன்னும் பாக்கி இருக்கின்றன.. சீக்கிரம் ரிலீஸ் செய்யவேண்டும் என்பதற்காக குவாலிட்டியில் சமரசம் செய்துகொள்ள முடியவே முடியாது.. ரசிகர்கள் கொஞ்சம் பொருத்தருள வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்..