Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஜெயராமுக்கு கொடுத்த வாக்கை காப்பற்றும் 'புலி முருகன்' இயக்குனர்..!

18 நவ, 2016 - 16:11 IST
எழுத்தின் அளவு:
jairam-with-the-director-of-puli-murugan

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை வைத்து 'புலி முருகன்' படத்தை இயக்கி சூப்பர்ஹிட்டாக்கிய இயக்குனர் வைசாக், அடுத்ததாக யாருடையை படத்தை இயக்க உள்ளார் என பலரும் ஆருடம் சொல்ல தொடங்கிவிட்டார்கள்.. அதில் பலரும் அவர் மம்முட்டி படத்தை தான் இயக்குவார் என பெட் கட்டாத குறையாக சொல்லி வந்தார்கள்.. காரணம் ஏற்கனவே 'போக்கிரி ராஜா' என்கிற ஹிட் படத்தை கொடுத்து வைசாக்கி இயக்குனராக மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகப்படுத்தியதே மம்முட்டி தானே.. அதுமட்டுமல்ல, மோகன்லாலை இயக்கியபின் அவருக்கு சமமாக உள்ள மம்முட்டியின் படத்தை இயக்குவதானே முறை என்பது அவர்கள் சொல்லும் லாஜிக்..


ஆனால் இந்த லாஜிக்கை எல்லாம் உடைத்தெறியும் விதமாக அடுத்ததாக ஜெயராம் நடிக்கவுள்ள படத்தை இயக்க உள்ளார் வைசாக். இது ஒன்றும் இப்போது எடுத்த முடிவு அல்ல.. 'புலி முருகன்' படம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே ஜெயராமுக்கு, தான் கொடுத்திருந்த வாக்கைத்தான் இப்போது நிறைவேற்றுகிறார் வைசாக். இந்த இரண்டு வருடங்களில் ஜெயராம் படங்கள் எதுவும் ஓடாதது, அவரது மார்க்கெட் டல்லானது என எதையும் வைசாக் ஒரு பொருட்டாக கருதவே இல்லை.. அதுமட்டுமல்ல, ஏற்கனவே 'சீனியர்ஸ்' என்கிற படத்தில் ஜெயராமை இயக்கியவர் தான் வைசாக். அவரது ஆஸ்தான கதாசிரியரான 'புலி முருகன்' படத்தின் கதையை எழுதிய உதயகிருஷ்ணா தான் இந்தப்படத்தின் கதையையும் எழுதுகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in