நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பெங்களூரு நடிகையான அட்டகத்தி நந்திதா, அங்கு முதல் படத்தில் நடித் துக்கொண்டிருந்தபோதே தமிழில் பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தில் தினேசுக்கு ஜோடியாக நடித்தார். முதல் படமே வெற்றி பெற்றதால் அதன்பிறகு அடுத்தடுத்து தமிழில் படங்கள் புக்காகின. அதனால் கன்னடத்தில் மீண்டும் நடிக்க முற்சி எடுக்காமல் கோடம்பாக்கத்தில் பட்ஜெட் படங்களில் பிசியாக நடித்து வந்தார். தற்போது உள்குத்து, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சில மாதங்களாக ஐதராபாத்தில் முகாமிட்டு படவேட்டை நடத்திய நந்திதா, எக்கடிக்கு பொத்தவ சின்னவட -என்ற படத்தில் நிகில் சித்தார்த் துக்கு ஜோடியாக நடித்தவர், தற்போது சந்தீப் கிஷன் நடிக்கும் ஒரு படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். தமிழில் கவர்ச்சி விசயத்தில் கோடு போட்டு நடித்து வந்த நந்திதா, தெலுங்கில் ஆடைகளுக்கு சுதந்திரம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறாராம். அதனால் மேலும் சில புதிய படங்கள் அவர் பக்கம் திரும்பி நிற்கிறதாம். ஆக, அடுத்தபடியாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகும் படங்களில் நடிக்கும் அடுத்தகட்ட முயற்சிகளில் இறங்கியிருக்கிறார் நந்திதா.