மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இயக்குனர் டோலி இயக்கத்தில் கட்டமராய்டு படத்தில் நடிக்கவுள்ள டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண், அப்படத்திற்கு பின்னர் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. நவம்பர் 5ல் இப்படத்தின் பூஜை நடைபெறவுள்ளதாக ஏற்கனவே திரிவிக்ரம் அறிவித்துள்ளார். இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை சமந்தாவும் இசையமைப்பாளராக அனிருத்தும் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. மேலும் இப்படத்திற்கு “தேவுடே திஹி வச்சினா” என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இவை அணைத்தும் வெறும் வதந்தியே என இயக்குனர் திரிவிக்ரம் மறுத்துள்ளார். இப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருவதாகவும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் திரிவிக்ரம் கூறியுள்ளார்.