‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மெகாஸ்டார் மம்முட்டி நடித்து சமீபத்தில் வெளியான 'தோப்பில் ஜோப்பன்' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் ஆண்ட்ரியா.. இந்தப்படத்திற்காக மம்முட்டியுடன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் ஆண்ட்ரியா.. இவர்களுடன் மலையாள நடிகர், நடிகைகள் சிலரும் கலந்துகொண்டனர்... இதில் என்ன பியூட்டி என்றால் மற்ற அனைவரும் மலையாளத்தில் சரளமாக பேசும்போது ஆண்ட்ரியா மட்டும் அரைகுறையாக புரிந்தும் புரியாத நிலையில் அவற்றை கவனித்துக்கொண்டிருந்தார்.
இந்தநிலையில் ஆண்ட்ரியா பாடகி என்பதால் அவருக்கு விருப்பமானது பாடலா, நடிப்பா என்று தொகுப்பாளர் கேட்க, அதற்கு “நிச்சயமாக பாடல் தான்” என பதில் சொன்னார்.. அவரிடம் அந்த நிகழ்ச்சிக்காக ஒரு பாடலை பாடும்படி கேட்கப்பட, அவரும் தமிழில் 'கோவா' படத்தில் இடம்பெற்ற 'இதுவரை' என்கிற பாடலை பாடினார்.. ஆனாலும் விடாத மம்முட்டி, “அந்த ஹிட் பாட்டை பாடுங்கள்” என மீண்டும் தூண்டிவிட, துப்பாக்கி படத்தில் இடம்பெற்ற 'கூகுள் கூகுள் பண்ணிப்பார்த்தேன்' என்கிற பாடலை பாடினார்..
அந்தப்பாடலில் இடம்பெற்ற வரிகளை கவனித்து நோக்கிய மம்முட்டி, அந்தப்பாடல் வரிகளில் சொல்லப்பட்ட கதாநாயகனின் குணாதிசயங்களும், 'தோப்பில் ஜோப்பன்' படத்தில் தனது குணாதிசயங்களும் ஒரேபோல இருப்பதாக குறிப்பிட்டார். இதில் ஆண்ட்ரியா கடைசியாக சொன்னது என்ன தெரியுமா..? தமிழில் நடிப்பதை விட மலையாளத்தில் நடிக்கவே பிடித்திருக்கிறது என்பதுதான்.