‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாளத்தில் பிரபல குணசித்தர நடிகர் கிருஷ்ணகுமார், தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரது மகள் அஹானா கிருஷ்ணா. சென்னை எம்.ஓ.வி வைஷ்ணவா கல்லூரியில் விஷ்காம் படித்து முடித்தார். தற்போது பிரேமம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய அல்தாப் என்ற புதுமுகம் இயக்கும் படத்தில் நிவின் பாலி ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதுப்பற்றி அஹானா கிருஷ்ணா கூறியதாவது: எனது தந்தை மலையாளத்திலும், தமிழிலும் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். எனக்கு நடிப்பு மீது பெரிய ஆர்வம் இல்லை. ஆனால் டி.வி.மீடியா பக்கம் ஆர்வம் இருந்தது. நிகழ்ச்சி தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். அதற்காகத்தான் விஷ்காம் படித்தேன். ஆனால் படித்து முடித்த கையோடு நிவின்பாலியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்தது. முதல் வாய்ப்பே பெரிய வாய்ப்பாக இருந்தால் உடனே ஒப்புக் கொண்டேன்.
இப்போது அடுத்த ஆசை வந்துவிட்டது, அது தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்பது. சென்னையில் 3 வருடங்கள் இருந்ததில் நன்றாக தமிழ் பேச கற்றுக் கொண்டேன். விஜய், அஜீத், சூர்யா மிகவும் பிடிக்கும். இப்போது வந்துள்ள விஜய் சேதுபதிக்கு பெரிய ரசிகை நான். அவர்களுடன் நடிக்கும் ஆசை வந்திருக்கிறது. விரைவில் நடிப்பேன் என்று நினைக்கிறேன் என்கிறார் அஹானா.