ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர் அல்லு அர்ஜூன் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கும் டீஜே படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் பூஜையின் போது அக்டோபரில் வழக்கமான படப்பிடிப்புகள் துவங்கும் என கூறப்பட்டது. அதன்படி ப்ரீ புரொடக்ஷனைத் தொடர்ந்து விரைவில் படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. அக்டோபர் 21 முதல் அல்லு அர்ஜூன் டீஜே படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். அண்மையில் வெளிவந்த மொகஞ்சதாரோ எனும் ஹிந்தி படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு நாயகியாக நடித்த பூஜா ஹெக்டே அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக டீஜே படத்தில் நடிக்கவுள்ளார். வருண் தேஜூடன் முகுந்தா, நாக சைதன்யாவுடன் ஒக்க லைலா கோஸம் போன்ற தெலுங்கு படங்களில் நடித்துள்ள பூஜா தமிழில் ஜீவாவுடன் முகமூடி படத்தில் நடித்துள்ளார்.