ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் |
பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், பாபு பங்காராம் படத்தின் வெற்றிக்கு பின்னர் குரு படத்தில் நடித்து வருகின்றார். தமிழ் மற்றும் ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கான குரு படத்தில் வெங்கடேஷ் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடிக்கின்றார். குரு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு ஊட்டி சென்றுள்ள வெங்கடேஷ் ராணா நடிக்கும் ஹசி படத்தின் அறிமுக காட்சிகளுக்கு பின்னணி பேசவுள்ளாராம். ரானா கப்பற்படை அதிகாரியாக நடிக்கும் ஹசி திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், தீவிரமாக நடைபெற்று வருகின்றது. பிப்ரவரி 24ல் திரைக்கு வரவிருக்கும் ஹசி படத்தின் அறிமுக காட்சிகளுக்கு குரல் கொடுக்கும்படி தனது நெருங்கிய உறவினரான வெங்கடேஷிடன் ரானா கேட்டுள்ளார். வெங்கடேஷும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். ஹசி படத்தின் டப்பிங் பணிகள் துவங்கும் போது வெங்கடேஷும் கலந்து கொள்வார் என தெரிகிறது.