மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளிவந்த ஜனதா கேரேஜ் திரைப்படம் சூப்பர் ஹிட் அடிக்கவே நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் மகிழ்ச்சியில் இருக்கின்றார். மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்த ஜனதா கேரேஜ் படத்தை இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கியிருந்தார். தனது அடுத்த படத்தில் நடிக்க தீவிரமாக கதை கேட்டு வரும் ஜூனியர் என்.டி.ஆர், தனது சகோதரர் கல்யாண் ராம் நடிக்கும் ஐஎஸ்எம் படத்தில் சிறப்பு தேற்றத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது.
அப்படத்தின் இயக்குனர் பூர் ஜெகன்நாத், ஜூனியர் என்.டி.ஆரைச் சந்தித்து ஐஎஸ்எம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கக் கேட்டுள்ளார். ஆனால் தனது சகோதரருடன் படம் முழுக்க நடிக்கவே ஆசை மாறாக இரண்டு நிமிட காட்சிகளில் தலைகாட்ட விருப்பமில்லை என்று கூறி மறுத்துவிட்டாராம். கல்யாண் ராம் நடிப்பில் சூப்பர் ஹிட்டான பட்டாஸ் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் அறிமுக காட்சிகளுக்கு குரல் கொடுந்திருந்தார் ஆனால் தற்போது சிறப்பு தோற்றத்தில் நடிக்க கேட்டதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.