மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கன்னட சினிமாவில் நட்சத்திர காஸ்ட்டியூம் டிசைனர் ரோஷ்னி தினகர். 30க்கும் மேற்பட்ட படங்களுக்கு காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்றி இருக்கிறார். சிறந்த காஸ்ட்யூம் டிசைனருக்கான கர்நாட அரசின் விருதுகளை பெற்றிருக்கிறார். கன்னட படங்களில் பணியாற்றினாலும் ரோஷ்னி மலையாளி. கேரளாவில் பிறந்து வளர்ந்தவர்.
ரோஷினி தற்போது இயக்குனராகியிருக்கிறார். அவர் இயக்கும் மலையாளப்படம் மை ஸ்டோரி. இதில் பிருத்விராஜ், பார்வதி ஹீரோ ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். சங்கர் ராமகிருஷ்ணன் கதை வசனம் எழுதியுள்ளார். நம்ம ஊர் நட்டி என்கிற நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த மாதம் முதல் வாரத்தில் நார்வே மற்றும் சுவிட்சர்லாந்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. மலையாள சினிமாவில் அஞ்சலி மேனன், ரேவதி சர்மா, ஸ்ரீபலாமேனன் என தொடர்ந்து இளம் பெண் இயக்குனர்கள் சாதனை படைத்து வருகிறார்கள். ரோஷினியும் சாதிப்பாரா என்பது அவர் படம் வெளிவந்ததும் தெரியும்.