‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இந்த வருடத்தின் நான்காவது படமாக மெகாஸ்டார் மம்முட்டி நடித்துள்ள 'தோப்பில் ஜோப்பன்' வரும் அக்-7ஆம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே மம்முட்டியை வைத்து மூன்று படங்களை இயக்கிய ஜானி ஆண்டனி தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். சசிகுமரையும் பிருத்விராஜையும் இணைத்து மலையாளத்தில் 'மாஸ்டர்ஸ்' என்கிற படத்தை இயக்கினாரே, அவரேதான். இந்தப்படத்தில் ஆண்ட்ரியா, மம்தா மோகன்தாஸ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.. நிகழ்ச்சி துவங்கியதுமே சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள யூரி இராணுவமுகாமில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மம்முட்டி உட்பட அனைவரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட நடிகர் ஜெயராம் இசைத்தகட்டை வெளியிட, அதை பிரபல இயக்குனர் மேஜர் ரவி பெற்றுக்கொண்டார்.