‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
வில் அம்பு படத்தின் மூலம் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். இவர் இப்போது தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார். இயக்குநர் பட்டாபி இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. பரபரப்பான காதல் கதையான இதில் ஒரு நாயகனாக சாய் ரோனக்கும், மற்றொரு நாயகனாக ஹரிஷூம், நாயகியாக பிரபல மாடல் பூஜா தோஷியும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்க உள்ளது. சுரேஷ் பாபு புரொடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.