தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
இரண்டாம் உலகப்போரின் பின்னணி காதலை மையப்படுத்தி வெளிவந்த கஞ்சே திரைப்படத்தில் வருண் தேஜ் மிரட்டலான போர்வீரனாகவும், ரொமேன்டிக்கான காதலனாகவும் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்தார். இயக்குனர் க்ரிஷ் இயக்கிய கஞ்சே திரைப்படம் சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்திற்கான தேசிய விருது வென்றது. கடந்த ஆண்டு பாகுபலி திரைப்படத்துடன் தேசிய விருது போட்டியில் பங்கேற்று விருது வென்ற கஞ்சே திரைப்படம் மேலும் ஒரு சிறப்பாக, பாரதாமுனி விருதினை வென்றுள்ளது. பாரதா முனி ஆர்ட்ஸ் அகடமியின் சார்பில் இத்தகவல் அதிகாராப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் நடைபெறவுள்ள விழாவில் கஞ்சே படத்திற்கு இவ்விருது வழங்கப்படும் என்றும் பாரதா முனி ஆர்ட்ஸ் அகடமியின் தலைவர் ரோமலா முனி கிருஷ்ண ரெட்டி அறிவித்துள்ளார். கஞ்சே படத்தின் வெற்றிக்கு பின்னர் மிஸ்டர், ஃபிடா போன்ற படங்களில் வருண் தேஜ் நடித்து வருகின்றார்