விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
மலையாள சினிமாவின் இளம் இயக்குனர் கம் நடிகர் வினீத் சீனிவாசன்.. ஒரு வடக்கன் செல்பி படஹ்தில் நிவின்பாளியுடன் இணைந்து நடிருந்தாரே அவர்தான். இந்த வருடம் சென்னையிலேயே 100 நாட்கள் ஓடிய 'ஜெக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்' படஹ்தை நிவின்பாலியை வைத்து இயக்கியதும் இவர்தான்.. இவர் தற்போது 'அபி' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார். இந்தப்படத்தில் மெக்கானிக் கேரேஜ் வைத்து நடத்துபவராக நடிக்கிறார் வினீத் சீனிவாசன்.
இதற்காக கேரளாவில் உள்ள மரியபுரம் என்கிற பகுதியில் ஒரு அபார்ட்மென்ட் அருகில் மிகப்பெரிய கேரேஜ் செட் ஒன்று போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.. நேற்று முன் தினம் அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் இந்த செட் சூறையாடப்பட்டு இருந்ததை மறுநாள் படப்பிடிப்பு நடத்தவந்த படப்பிடிப்புக்குழுவினர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.. செட்டின் மேற்கூரை பிய்த்து எறியப்பட்டு இருந்தது. தவிர உள்ளே இருந்த பழுதடைந்த கார்கள், மோட்டார் பைக்குகளின் பாகங்களும் திருட்டு போய்விட்டன.. இதுகுறித்து படக்குழுவினர் போலீசில் புகார் தந்துள்ளனர்.