‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சில நடிகைகள் இருக்கிறார்களே.. முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பை பெறுவதற்காக ஆஹா ஓஹோவென வார்த்தை ஜாலம் காட்டி, வசியம் பண்ணி காரியம் சாதித்து விடுகிறார்கள். ஆனால் ஒரு ஹீரோவுடன் நடித்த பிறகு, அவரைவிட பெரிய ஹீரோவுடன் நடித்தார் என்றால் முந்தைய ஹீரோக்களை பற்றி கவலைப்படாமல் அவர்களை மட்டம் தட்டுவதை தங்களை அறிந்தோ அறியாமலோ செய்து வருகிறார்கள். இப்படித்தான் நடிகை சமந்தா, ஜனதா கேரேஜ்' படத்தின் புரமோஷனில் ஜூனியர் என்.டி.ஆரை புகழ்கிறேன் என தனது வருங்கால கணவர் நாக சைதன்யாவை 'சிறிய நடிகர்' என சொல்லி சலசலப்பை ஏற்படுத்தினார்..
இப்போதும் அதே ஜூனியர் என்.டி.ஆரை புகழ்கிறேன் என்கிற பேரில் அல்லு அர்ஜுனை மறைமுகமாக மட்டம் தட்டி, அவரது ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார் நடிகை நித்யா மேனன். ஜூனியர் என்.டி.ஆருடன் 'ஜனதா கேரேஜ்' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார் நித்யா மேனன். சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நித்யா மேனன், அங்கிருந்த ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக “இப்போதுதான் முதன்முறையாக ஒரு ஸ்டார் ஹீரோ படத்தில் நடித்திருக்கிறேன்” என கூறி கைதட்டலை அள்ளினார்.
இதுபோதாதா அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு..? ஏன்.. தங்களது அபிமான நடிகர் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனுடன் சன் ஆப் சத்யமூர்த்தி படத்தில் நித்யா மேனன் நடித்தாரே.. அப்போது அவரது கண்களுக்கு அல்லு அர்ஜுன் பெரிய ஸ்டாராக தெரியவில்லையா என சோஷியல் மீடியாவில் நித்யா மேனனை வறுத்து எடுத்து வருகிறார்களாம். ஒருவேளை அந்தப்படத்தில் சமந்தா மெயின் ஹீரோயினாக இருந்து, அதனால் அல்லு அர்ஜுனுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் நித்யா மேனன் அப்படி சொல்லியிருப்பாரோ என்னவோ..?