மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மலையாளத்தில் சின்னசின்ன ரோல்களில் சாதாரணமாக நடித்து வந்த ஒரு காமெடி நடிகரான சசிகலிங்கா என்பவர், ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானார் என்பதும் அதைவிட இந்தப்படத்தில் நடிப்பதற்காக மலையாள சூப்பர்ஸ்டார்கள் தற்போது சம்பளமாக வாங்கும் தொகையை விட அதிகமான தொகையை இவருக்கு சம்பளமாக கொடுத்துள்ளார்கள் என்பதும் கடந்த வருடமே பேசப்பட்டு வந்த ஆச்சர்யமான நிகழ்வு. கேள்விப்பட்டு அனைவருக்கும் ஹார்ட் அட்டாக் வராத குறைதான். அப்போதைக்கு அது யாருடைய படம் என்கிற விபரங்களை அவர் சொல்ல மறுத்துவிட்டார்.
ஆனால் இப்போது அவருடன் மலையாள படம் ஒன்றில் நடித்துவரும் காமெடி நடிகரான அஜூ வர்கீஸ், பேச்சுவாக்கில் அந்தப்படம் பற்றிய விபரங்களை கறந்து, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தகவல்கள் உண்மையில் பிரமிகத்தான் வைக்கின்றன.. ஆம்.. ஆஸ்கர் விருதுகளை அள்ளிய நமது ஸ்டீவன்ஸ்பீல்பெர்க் டைரக்சனில் ஹாலிவுட் சூப்பர் நடிகர்களில் ஒருவரான டாம் குரூஸுடன் இணைந்து முக்கியமான வேடத்தில் நடித்துள்ளாராம்.