‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
டோலிவுட்டில் பிசியான நடிகையான ரெஜினா ஹிந்தி படவாய்ப்பு கிடைத்ததும் சம்பளத்தையும் உயர்த்தி விட்டார். இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் நக்ஷ்த்ரா படத்தில் நடித்து வரும் ரெஜினா, அப்படத்திற்கு முன்னதாக நர ரோஹித் உடன் இணைந்து நடித்த ஜோ அச்சுதானந்தா திரைப்படம் திரைக்கு தயாராகி விட்டது. இயக்குனர் ஸ்ரீவாஸ் இயக்கும் இப்படம் செப்டம்பர் 9ல் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து ரோஹித்துடன் ரெஜினா ஜோடி சேர்ந்து நடித்துள்ள சங்கரா திரைப்படம் செப்டம்பர் 16ல் திரைக்கு வரவுள்ளது. இயக்குனர் சத்யா இயக்கியுள்ள இத்திரைப்படம் தமிழில் வெளிவந்த மௌனகுரு படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். ரெஜினா நடித்துள்ள திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரவிருப்பதால் ரெஜினா இரட்டை சந்தோஷத்தில் உலா வருகின்றாராம்