‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான பிரேம் அதே பெயருடன் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இப்படத்தில் நாகசைதன்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கின்றார் ஸ்ருதிஹாசன். இப்படத்தில் இடம்பெறும் “எவரே” எனும் சிங்கிள் டிராக் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் பிரேமம் படத்தைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசன் ஜாக்வார் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடவுள்ளாராம்.
கன்னடம் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் ஜாக்வார் படத்தில் கன்னட நடிகர் நிகில் குமார் நாயகனாக நடிக்கிறார். முன்னாள் இந்திய பிரதமர் தேவகௌடாவின் பேரனும், முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசுவாமியின் மகனுமான நிகில் குமாருக்கு ஜோடியாக தீப்தி நடிக்கிறார். இயக்குனர் மஹாதேவ் இயக்கும் இப்படத்தை அனிதா குமாராசுவாமி தயாரிக்கிறார். ஜாக்வார் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் ‛ஆகடு' படத்தில் குத்தாட்டம் போட்ட நடிகை ஸ்ருதிஹாசன் அடுத்ததாக கன்னட படத்தில் குத்தாட்டம் போடவுள்ளார்.