மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஆறு மாதங்களுக்கு முன் அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த விஷயம் இப்போது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ஆம்.. மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் தன்ஷிகா. படத்தின் பெயர் 'லவ் இன் ஏன்ஜெங்கோ'. அங்கொன்றும் இங்கொன்றுமாக சாதாரண வேடங்களில் நடித்த தன்ஷிகா, பேராண்மை, அதை தொடர்ந்து பாலாவின் 'பரதேசி' படங்களுக்குப்பின் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.. தொடர்ந்து இரண்டாம் நிலை நடிகர்களுடன் நடித்துவந்த அவர் திடீரென 'கபாலி'யில் ரஜினியின் மகளாக நடிக்க ஒப்பந்தமான பின் அவர் மீது தனி வெளிச்சம் விழ ஆரம்பித்தது.. கபாளியில் அவரது நடிப்பும் பிரமாதமாக பேசப்பட்டு வருகிறது.
துல்கரின் படத்தை இயக்க இருக்கும் பிரதாப் போத்தன் தமிழ், மலையாளம் இரண்டு திரைப்பட உலகையும் நன்கு கவனித்து வருபவர்.. அதனால் தன்ஷிகாவிடம் உள்ள நடிப்பையும் திறமையையும் கண்ட அவர்தான் தன்ஷிகாவை தனது பட ஹீரோயின் ஆக்கியுள்ளார். இந்தப்படத்திற்கு கதை எழுதுபவர் 'பெங்களூர் டேய்ஸ்' ஹிட் பட இயக்குனரும் தேசிய விருது பெற்ற 'உஸ்தாத் ஹோட்டல்' படத்திற்கு வசனம் எழுதியவருமான அஞ்சலி மேனன் தான்.