பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

படப்பிடிப்புக்கு ஒதுக்கும் நேரம் போக, மீதியுள்ள ஒய்வு நேரங்கில் சமூக பொறுப்புள்ள நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நேரம் ஒதுக்கி அவற்றில் கலந்துகொள்பவர் மலையாள நடிகர் திலீப்.. அப்படித்தான் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திலீப்பை கண்ணீர் உகுக்க வைத்திருக்கிறது அங்கே பேசியவரின் பேச்சு.. கேரளாவில் மனநலம் பாதிக்கப்பட்டு தெருவில் சுற்றித்திரியும் பெண்களுக்கு அடைக்கலம் தரும் விதமாக 'ஸ்னேகதீரம்' என்கிற அமைப்பு திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வாமனபுரம் அருகில் உள்ள மித்ரமலை என்கிற இடத்தில் மறுவாழ்வு மையத்தை நிறுவியுள்ளது. இதன் துவக்க விழாவில் கலந்துகொள்ள திலீப்பிற்கு அழைப்பு அனுப்ப, அவரும் இந்த விழாவில் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் இந்த அமைப்பின் தலைவியான ரோஸ்லின் என்பவர் பேசும்போது, தெருவில் மனநலம் குன்றியவாறு சுற்றித்திரியும் பெண்கள் எவ்வாறு சமூக விஷமிகளின் காம இச்சைக்கு பலியாகின்றார்கள், அதனால் கர்ப்பமும் அடைந்து, குழந்தைகளையும் பெற்றுகொண்டு எப்படி நிர்க்கதியாக விடப்படுகிறார்கள் என்பதை விளக்கி பேசினார். இதை கேட்க கேட்க திலீப்பின் கண்களில் அவரையும் அறியாமல் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.. சற்றுநேரம் வரை தனது கைக்குட்டையால் கண்ணீரை துடைத்தபடியே இருந்த திலீப், தான் பேசும்போது, இந்த அமைப்பினர் எந்த உதவி கேட்டாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் எப்போது வேண்டுமானாலும் தன்னை தடையின்றி அணுகலாம் எனவும் கூறியுள்ளார்.