'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
நானி நடித்த ஜென்டில்மேன் படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகில் நாயகியாக அறிமுகமான நிவேதா தாமஸிற்கு ஜென்டில்மேன் படத்தின் வெற்றி நல்ல அறிமுகத்தை தேடிக் கொடுத்துள்ளது. தெலுங்கு ரசிகர்களின் ஆதரவை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ள நிவேதா தெலுங்கு பட இயக்குனர்களிடம் கதை கேட்க துவங்கியுள்ளார்.
அந்த வகையில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கும் அதிரடி ஆக்ஷன் படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு நிவேதாவை தேடி வந்துள்ளதாம். நிவேதாவும் ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம். நடிகர் தயாரிப்பாளர் கல்யாண் ராம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஆகஸ்டில் துவங்கவுள்ளன.
ஜனதா கேரேஜ் படத்தில் நடித்து வரும் ஜூனியர் என்.டி.ஆர் அப்படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தற்சமயம் பிசியாகியுள்ளார். ஜூலை இறுதியில் ஜனதா கேரேஜ் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடையும் என கூறப்படுகின்றது. ஆகஸ்ட் 12ல் இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளத.