பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... |
இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கிய சரைய்னோடு படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களைக் கவர்ந்த அல்லு அர்ஜூன் அடுத்ததாக இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் பூஜை விரைவில் நடைபெறும் என கூறப்படுகின்றது. முதலில் இப்படத்தின் கதையை ஹரீஷ் சங்கர் பவர் ஸ்டார் பவன் கல்யாணிடம் கூறியுள்ளார். ஆனால் பவன் கல்யாண் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
அடுத்ததாக அல்லு அர்ஜூனை அனுகிய ஹரீஷ் சங்கர் திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்து அல்லு அர்ஜூனிடம் இப்படத்தில் நடிக்க சம்மதம் வாங்கிவிட்டாராம். இப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிக்கும் நாயகிக்கான தேர்வில் ஹரீஷ் தற்போது பிசியாகியுள்ளார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.