ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
வருடத்திற்கு நான்கைந்து த்ரில்லர் படங்கள் வழக்கமாக வெளியாகும் மலையாள சினிமாவில் இந்த வருடத்தில் இதுநாள் வரை சொல்லும்படியாக த்ரில்லர் படம் ஏதும் வரவும் இல்லை. அந்தக்குறையை போக்கும் விதமாக புதிய த்ரில்லராக உருவாகி வருகிறது 'தம்'. இந்தப்படத்தின் மைய கதாபாத்திரங்களாக லால் மற்றும் டாம் சாக்கோ ஆகியோர் நடிக்கின்றனர்.. மிகவும் பெயர்பெற்ற கடத்தல்காரனான சேவியர் என்பவனைப்பற்றியும் அவனது கேங் பற்றியும் கடத்தல் பின்னணியில் சொல்லும் படமாக இது உருவாகிறது..
இதில் சேவியர் கேரக்டரில் லாலும் அவரது ஐந்து கையாட்களில் முக்கியமானவராக டாம் சாக்கோவும் நடிக்கின்றனர். இந்த சாக்கோ தான் கடந்தவருடம் போதை மருந்து பயன்படுத்தினார் என கைதாகி பின் ஜாமீனில் விடுதலையானவர். இவருக்கு ஜோடியாக 'ஆர்டினரி' படம் புகழ் ஸ்ரீதா சிவதாஸ் நடிக்கிறார். நடிகர் லால் நடித்தாலே அது த்ரில்லர் படமாகத்தான் இருக்கும் என்பது ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டது என்றே சொல்லலாம். லால் நடிப்பில் வெளியான 'ஷட்டர்' மற்றும் கடந்த வருடம் லால் நடிப்பில் வெளியான 'ஹாய் ஐ ஆம் டோனி' ஆகிய படங்கள் த்ரில்லர் பட்டியலில் இடம்பிடித்தவை தான்.