'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
தமிழில் இந்த வருடத் துவக்கத்திலேயே வெளிவந்து குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்த படம் 'இறுதிச் சுற்று'. சுதா கோங்கரா இயக்கிய இந்தப் படத்தின் நடித்ததன் மூலம் மாதவனுக்கு தமிழில் மீண்டும் ஒரு சுற்று வர இடம் கிடைத்துள்ளது. தமிழில் சில புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
'இறுதிச் சுற்று' படம் வெளிவந்து வெற்றி பெற்றதுமே அந்தப் படத்தின் தெலுங்கு உரிமைக்கு நல்ல விலை கிடைத்து விற்று விட்டார்கள். அந்தப் படத்தில் தெலுங்கில் சீனியர் ஹீரோவான வெங்கடேஷ், மாதவன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தமிழில் நாயகியாக நடித்த ரித்திகா சிங்-கே தெலுங்கிலும் நாயகியாக நடிக்க உள்ளாராம்.
தமிழில் படத்தை இயக்கிய சுதா கோங்கரா தெலுங்கிலும் இப்படத்தை இயக்க உள்ளார். தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட சுதாவுக்கு இதன் மூலம் தெலுங்கில் நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. வெங்கடேஷ் நடித்துள்ள 'பாபு பங்காரம்' படம் விரைவில் வெளியாக உள்ளது. அதற்குப் பிறகு 'இறுதிச் சுற்று' படத்தின் ரீமேக் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.