‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தெலுங்கு திரை உலகில் சமீபத்தில் காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ள இளம் ஜோடி சமந்தா - நாகசைதன்யா. இதில் சமந்தா விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக திட்டமிட்டிருப்பதாகக் கூறி தனது காதலர் பெயரை வெளியிட மறுத்துவிட்டார். இருப்பினும் சமந்தாவுடன் ஜோடியாக பொது இடங்களில் அடிக்கடி காணப்பட்ட நாக சைதன்யா தான் சமந்தாவின் காதலர் என கூறப்பட்டது. இதனை மறுக்காத இரு தரப்பினரின் மௌனமும் சமந்தா - நாக சைதன்யாவின் காதலை உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் சமந்தாவை நாக சைதன்யாவின் அம்மா லக்ஷ்மி, தனது சகோதரரும் நடிகருமான வெங்கடேஷுடன் இணைந்து சந்தித்து பேசியுள்ளாராம். இச்சந்திப்பின் போது லக்ஷ்மிக்கு சமந்தாவை பிடித்து விட்டதாகவும் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. நாகர்ஜுனாவின் முதல் மனைவி லக்ஷ்மிக்கு பிறந்த நாக சைதன்யா நாகர்ஜுனா - லக்ஷ்மி விவாகரத்திற்கு பின்னர் நாகர்ஜுனாவின் இரண்டாவது மனைவி அமலா குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.