மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ்த் திரையுலகத்தில் தனது தவறான முடிவால் மார்க்கெட்டை இழந்த நடிகைகளில் முக்கியமானவர் ஸ்ரேயா. அவரைப் பற்றி எப்போது எழுதினாலும் 'ஏம்மா...வடிவேலு கூட போய் ஒரு பாட்டுக்கு ஆடினீங்க,' என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. அதுவே, 'சிவாஜி' படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தும் ஸ்ரேயாவால் முதலிடத்திற்கு வர முடியாமல் போய்விட்டது.
அவரும் என்னென்னமோ முயற்சி செய்து பார்த்தும் இங்குள்ள ஹீரோக்கள் மனம் இரக்கப்படவேயில்லை. தெலுங்கிலும் மற்ற இளம் நடிகைகள் ஸ்ரேயாவை ஒதுக்கிவிட்டனர்.
வேறு வழியில்லாமல் கடந்த வருடம் தெலுங்கில் 'கோபாலா கோபாலா' படத்தில் அம்மா கதாபாத்திரத்திலும், ஹிந்தியில் 'த்ரிஷ்யம்' படத்திலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தார்.
சில வாரங்களுக்கு முன்பு கூட கிளாமரான புதிய 'ஃபோட்டோ ஷுட்' ஒன்றை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டார் ஸ்ரேயா. இருந்தாலும், அவர் எதிர்பார்த்தபடி நாயகி கதாபாத்திரம் பெரிய அளவில் கிடைக்கவில்லை. இதனிடையே, பாலகிருஷ்ணாவின் 100வது படமான 'கௌதமிபுத்ர சட்டகர்னி' படத்தில் அவருடைய ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஸ்ரேயா. இந்தப் படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கப் போகிறார். இருந்தாலும் ஸ்ரேயா கதாபாத்திரத்திற்கும் அதிக முக்கியத்துவம் உள்ளதாம்.