'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
சமுத்திரக்கனியின் இயக்கத்தில் தமிழில் உருவாகியுள்ள படம் தான் 'அப்பா'. இந்த திரைப்படத்திற்கான விளம்பரத்தின் ஒரு பகுதியாகவும், அதேசமயம் பல பிரபலங்கள் தங்களது அப்பாக்களின் ஞாபகங்களை நெகிழ்வுடன் பகிர்ந்துகொள்ளும் விதமாகவும் அவ்வப்போது பல திரையுலக பிரபலங்கள் தங்களது 'அப்பா' பற்றி பகிர்ந்துகொண்ட வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்சினிமா பிரபலங்களை தாண்டி மலையாள நடிகை மஞ்சு வாரியரும் இந்த திரைப்படத்தின் புரமோஷனில் பங்கெடுக்கும் விதமாக தனது அப்பா குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்துகொண்டுள்ளார்.
“கடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை எனக்கு.. கடவுளே கிடைத்தார் வரமாக.. அவர் தான் என் அப்பா” என சுந்தர தமிழில் தான் பேச ஆரம்பிக்கிறார் மஞ்சு வாரியர். என்னதான் மலையாள நடிகையாக இருந்தாலும் அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டின் நாகர்கோவிலில் தானே.. தொடர்ந்து தன்னுடைய தந்தை தனக்காக, தங்கள் குடும்பத்துக்காக செய்த தியாகங்களை பட்டியலிட்ட மஞ்சு வாரியர், கடைசிக்காலத்தில் அவர் கேன்சரால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டதையும் தாங்கள் அவருக்கு தந்த அரவணைப்பையும் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக சுத்த தமிழில் “அப்பா நீங்கள் எனக்கு கடவுள் தான்” என நெகிழ்ச்சியோடு முடித்துள்ளார்.