‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நரேன் நடித்து ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் மலையாளத்தில் வெளியாக இருக்கும் படம் 'அங்கன தன்னே நேதாவே அஞ்சேட்டன் நம் பின்னாலே'.. இவ்வளவு நீளமான பெயர் கொண்ட இந்தப்படம் வரும் ஜுன்-3ஆம் தேதி வெளியாக இருபதாக தகவல்.. இந்தப்படத்தில் நரேன் தேர்தலில் போட்டியிட்டு அரசியலுக்கு வருபவராக நடித்துள்ளார். கடந்த வருடத்தில் தமிழில் வெளியான கத்துக்குட்டி படத்தில் இதேபோலத்தான் கதாபாத்திரம் ஏற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மீரா நந்தன் நரேனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
நரேனை தவிர மிக முக்கியமான வேடத்தில் முகேஷ் நடித்துள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சமீபத்தில் தான் கேரள சட்டமன்ற தேர்தலில் கொல்லம் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ ஆகியிருக்கும் முகேஷ், இந்தப்படத்தில் காமெடி அரசியல்வாதியாக நடித்துள்ளாராம். படத்தில் அவர் செய்யும் அரசியல் கோமாளித்தனங்கள் எங்கே நிஜ அரசியல்வாதியாகிவிட்ட தன்னை ஏதேனும் விமர்சனத்திற்கு ஆளாக்கிவிடுமோ என்கிற கலக்கத்தில் இருக்கிறாராம் முதன்முறையாக எம்.எல்.ஏ ஆகியுள்ள முகேஷ்.