‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சில வருடங்களுக்கு முன் பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் 'புதிய தீரங்கள்' என்கிற படம் வெளியானது. நிவின்பாலி கதாநாயகனாக நடித்த இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இன்னொரு நடிகர் சித்தார்த் சிவா.. பின்னாளில் இவர் இயக்குனராக மாறி, 'ஏய்ன்', '101 சோத்யங்கள்' என இரண்டு தேசிய விருது படங்களை எடுத்தார். 'புதிய தீரங்கள்' படத்தில் நடித்த காலத்தில் இருந்தே நிவின்பாலியுடன் நல்ல நட்பு பாராட்டி வரும் சித்தார்த் சிவா தற்போது குஞ்சாக்கோ போபன் நடிக்கும் படத்தை இயக்கி முடிக்கும் தருவாயில் உள்ளார். அதையடுத்து நிவின்பாலி நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வருகிறார்..
இந்தப்படத்தில் நிவின்பாலி அரசியல் தலைவர் கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்றும் படத்தில் அவருடன் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள் என்றும் தகவல் கசிந்துள்ளது. அதைவிட முக்கியமான விஷயம் இந்த மூன்று கதாநாயகிகளில் ஒருவராக 'காக்கா முட்டை' புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருக்கிறார் என்கிற தகவலும் உலாவருகிறது. விரைவில் துவங்கப்பட உள்ள இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ நடிகர்கள் பட்டியல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.