மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மிர்ச்சி, ஸ்ரீமந்துடு படப்புகழ் இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கும் ஜனதா கேரேஜ் எனும் அதிரடி ஆக்ஷன் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரட்டை வேடங்களில் நடிக்கின்றார். சமந்தா மற்றும் நித்யா மேனன் நாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், உன்னி முகுந்தன, சுஹாசினி, சாய்குமார் மற்றும் பலர் நடிக்கின்றனர். தற்போது இந்த நட்சத்திர பட்டாளத்தில் பிரபல மராத்தி நடிகர் சச்சின் கேத்கர் இணையவுள்ளார். யாவரும் நலம், மாற்றான் போன்ற தமிழ்ப்படங்களில் வில்லனாக நடித்த சச்சின், யாவரும் நலம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான 13B, பிரதார்ஸ் போன்ற தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஜனதா கேரேஜ் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் சிவா சச்சினை அனுகிய போது, இப்படத்தின் கதை மற்றும் கதாபாத்திரம் பிடித்துப் போக இப்படத்தில் நடிக்க உடனே சம்மதம் தெரிவித்து விட்டாராம் சச்சின்.