ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
டோலிவுட்டின் யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆர் நேற்று(மே 20) தனது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினார். ரசிகர்களும், நண்பர்களும் ஜூனியர் என்.டி.ஆருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் பல இடங்களில் அவரது பிறந்த நாளைக் கொண்டாடினர். ஐதராபாத்தில் உள்ள ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் டான் பாஸ்கோ பள்ளிக்குழந்தைகளுக்கு புத்தக பை, மதிய உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாளை கொண்டாடினர்.
தன்னை வாழ்த்திய அணைவருக்கும் ஜூனியர் என்.டி.ஆர் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்தார். மேலும் தனது பிறந்த நாளில் தனித்துவமான பரிசு வழங்கிய இயக்குனர் சுகுமாருக்கும் நன்றி தெரிவித்த ஜூனியர் என்.டி.ஆர், சுகுமார் வழங்கிய பரிசின் புகைப்படத்தையும் டுவிட்டரில் பகிர்ந்திருந்தார். ஜூனியர் என்.டி.ஆரின் நாணாகு ப்ரேமதோ படத்தை இயக்கிய சுகுமார் அப்படத்தின் டேக்லைன்-ஆன அன்புடன் தந்தைக்கு என்ற வரிகள் பொறிக்கப்பட்ட சுவர்கடிகாரம் ஒன்றை ஜூனியர் என்.டி.ஆருக்கு பரிசளித்துள்ளார்.