ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
காணாமல் போன நடிகர்களின் பட்டியலில் எல்லாம் நடிகர் வினீத்தை தேட வேண்டாம். தற்போதும் அவர் லைம் லைட்டிலேயே தான் இருக்கிறார். ஆனால் சந்தேகமேயில்லாமல் சீனியர் நடிகர்கள் பட்டியலில் சேர்ந்துவிட்டதால், வருகின்ற கதாபாத்திரங்கள் எல்லாம் இரண்டு ஹீரோக்களில் ஒருவர் அல்லது சற்றே நீட்டிக்கப்பட்ட கெஸ்ட் ரோல்களாகத்தான் வருகின்றனவாம். அந்த வகையில் கடந்த வருடம் ஐந்து படங்களில் நடித்துவிட்ட வினீத்திற்கு இப்போது அவருக்குள் இருக்கும் நடனக்கலையை முழுதும் வெளிப்படுத்தும் விதமாக 'காம்போஜி' என்கிற படத்தில் கதகளி ஆசானாக நடிக்கும் வாய்ப்பு தேடிவந்துள்ளது..
வினீத் அடிப்படையில் டான்சர் தான் என்றாலும் இந்தப்படத்திற்காக கதகளி ஆட்டத்தில் இன்னும் சில நுணுக்கங்களை கற்று வந்திருக்கிறாராம். இவருக்கு ஜோடியாக நடிப்பவர் லட்சுமி கோபால்சாமி.. அவரும் முறைப்படி நடனம் பயின்ற ஒரு டான்சர் தான் என்பது கூடுதல் சிறப்பு. தவிர, இந்தப்படத்தில் முதன்முறையாக நடன இயக்குனராக புரமோஷனும் பெற்றுள்ளார் வினீத்.. ஆனால் உண்மையிலேயே தான் பணியாற்றிய பல படங்களில் கடந்த பல வருடங்களாக நடன இயக்குனராக வினீத் பணிபுரிந்து இருந்தாலும் கூட, அவருக்கு நடன இயக்குனர்கள் சங்கத்தில் உறுப்பினர் கார்டு இல்லாததால் அவரது பெயர் டைட்டில் கார்டில் இடம்பெறவே இல்லையாம். இப்போதுதான் அவருக்கான உறுப்பினர் கார்டு கிடைத்துள்ளதால் இனி நடன இயக்குனர் பிரிவிலும் அவரது பெயர் இடம்பெறும் என சந்தோஷப்படுகிறார் வினீத்.