மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த நடிகை சார்மி தற்போது படவாய்ப்புகள் எதுவுமின்றி படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்த துவங்கி விட்டார். இயக்குனர் பூரி ஜெகன்நாத்தின் நெருங்கிய தோழியான சார்மி அவரது படங்களில் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவிருக்கும் “ஜன கண மன” படத்தை நடிகை சார்மி தயாரிக்கவுள்ளதாக டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில நாட்களுக்கு முன்னர் சார்மி “ஜன கன மன” எனும் படத்தலைப்பை பதிவு செய்துள்ளார். மேலும் பூரி ஜெகன்நாத்தும் இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும், படங்களை தயாரிப்பதில் ஆர்வமில்லை என்றும் அண்மையில் கூறினார். இதனால் இப்படத்தை நடிகை சார்மியே தயாரிக்கக் கூடும் என நம்ப தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் சார்மி நடித்த ஜோதிலக்ஷ்மி படத்தின் வாயிலாகவே சார்மி தயாரிப்பாளராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.